Showing posts with label Kancheepuram. Show all posts
Showing posts with label Kancheepuram. Show all posts

Saturday, January 4, 2014

வடமங்கலம் & கருமாங்கழனி: 3,000 year old turtle-shaped tomb found in Kancheepuram


காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமகா வித்யாலயா பல்கலைக்கழகம் உள்ளது.

இதன் தொல்லியல் துறை சார்பில் துறைத்தலைவர் ராமகிருஷ்ண பிசபதி தலைமையில் குழுவினர் கடந்த 10 நாளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம், கருமாங்கழனி ஏரி அருகில் ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு 2000 ஆண்டுக்கு முன்பு பயன்படுத்திய பழங்கால மனிதர்களின் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து துறைத்தலைவர் ராமகிருஷ்ண பிசபதி கூறுகையில், ‘பல்கலைக்கழக மாணவர்களுடன் தொல்லியல் துறையினர் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு வடமங்கலம், கருமாங்கழனி ஏரி அருகில் நிலத்தை தோண்டி ஆராய்ச்சி செய்தோம். அப்போது, 2000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரும்பு ஆயுதம் தயாரிக்கும் பட்டறை  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தயாரிக்கும் உபகரணங்களும் கிடைத்துள்ளன. கற்கால மனிதர்களின் மண்ணால் செய்யப்பட்ட குடுவை ஓடுகளும் கிடைத்துள்ளன.

இவற்றை காஞ்சிபுரத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு சென்று துள்ளியமாக ஆராய்ச்சி செய்ய உள்ளோம்’ என்றார்.

The excavation of a tomb in Vadamangalam village in Kancheepuram district has demonstrated yet again that the entire district is a treasure trove of megalithic burial sites, which reflect the culture of an era buried in the annals of time.

About 3,000 years ago, when man discovered iron and its use as a tool and a weapon, the metal revolutionised life and society. That period is better known as Iron Age.

In Tamil Nadu, Iron Age also marked a practice of burying the dead and placing boulders in the form of a circle or constructing dolmens with slabs on the surface. They were meant to be memorials for the beloved relatives who passed away. Such places are called megalithic sites.

Kancheepuram district has the maximum number of megalithic sites in Tamil Nadu, followed by Pudukottai. In Kanchi district alone, there are about 150 megalithic burial sites out of which 103 are identified, notified and protected by the Archaeological Survey of India (ASI).

However, no habitation sites have be properly identified or found in Kanchi district till date. Kundrathur is believed to be a habitation site where people flourished 2,500-3,000 years ago, but a proper identification has not yet been done.

Among the areas identified as megalithic sites in Kanchi district are Tiruporur, Siruthavur, Thanur and Amirthamangalam near Maduranthakam, Pallavaram, Vadamangalam, Venbakkam and Sembakkam.

Though other districts too have megalithic sites, they are not as rich as Kancheepuram. Pudukottai district has about 70 such sites, including the famed Adichanallur in Tuticorin district where excavations started in the 19th century. Kodumanal near Erode is among the other notable megalithic burial places in Tamil Nadu.

http://tamilheritagefoundation.blogspot.in/2012/03/3000-year-old-turtle-shaped-tomb-found.html

http://www.deccanchronicle.com/130331/news-current-affairs/article/village-dates-back-iron-age

http://www.newindianexpress.com/states/tamil_nadu/article343755.ece

http://www.newindianexpress.com/states/tamil_nadu/article343753.ece








Thursday, January 2, 2014

சாஸ்திரம்பாக்கம்: செங்கல்பட்டு அருகே ஓர் ஆதிச்சநல்லூர் (Sasthirambakkam)


காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே சாஸ்திரம்பாக்கத்தில் ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டது போல அரியவகை முதுமக்கள் தாழிகள் ஏராளமாக புதையுண்டு கிடக்கின்றன.
ரியல் எஸ்டேட் முதலைகளின் கையில் சிக்கியுள்ள அப்பகுதிகளை மீட்டு அகழ்வாய்வுக்கு உத்தரவிட்டு, தமிழர்களின் அரிய நாகரிகத்தை உலகுக்கு எடுத்துக்காட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பண்டைய நாகரிகங்கள் எல்லாம் ஆற்றங்கரையில்தான் தோன்றியுள்ளன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆம்... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதிக்கரையில் தோன்றிய சிந்து சமவெளி நாகரிகம் குறித்து இன்றும் நாம் பேசி வருகிறோம்.

இதேபோல் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம், தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆதிச்சநல்லூரில் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் தமிழ் சமுதாயத்தின் வரலாறு புதைந்து கிடந்தது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை 1876-ல் முதல்முதலாக அகழ்வாய்வு மேற்கொண்டது.

இதன் மூலம் நம் தமிழ் சமுதாயத்தின் அரிய தகவல்கள் கிடைத்தன. இது இன்றைக்கும் உலக அளவில் பேசப்படுகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள்தாழிகளே சிறப்புக்குரியவை என்றும் அகழ்வாய்வுகள் கூறுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம்: அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல்லாவரம், செங்கல்பட்டு, கல்பாக்கம் அருகே கீழகழனி, மலைவையாவூர், பழவேரி, இளநகர், ஆப்பூர் ஆகிய பகுதிகளில் முதுமக்கள்தாழி உள்ளிட்ட பல அரிய பொக்கிஷங்கள் கிடைத்துள்ளன. ÷குறிப்பாக பாலாற்றுக் கரையில் செங்கல்பட்டை அடுத்த பாலூர் அருகே சாஸ்திரம்பாக்கம் என்ற கிராமத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் சமுதாயம் வாழ்ந்ததற்கான பல அரிய சான்றுகள் புதையுண்டு கிடைக்கின்றன.

குறிப்பாக பாலூர் பாலாற்றங்கரைக்கு வடக்கே, வெங்கடாபுரம், சாஸ்திரம்பாக்கம், வெண்பாக்கம், குருவின்மேடு, தாசரிகுன்னத்தூர் என வட்ட வடிவில் அமைந்துள்ள மலைகளுக்கு மத்தியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வசித்துள்ளனர். ÷குறிப்பாக சாஸ்திரம்பாக்கம் மலைகளைச் சுற்றி ஆதிச்சநல்லூரில் காணப்படும் அதே வகையிலான அரிய வகை இடுகாடு காணப்படுகிறது.

இறந்தவர்களின் உடலை 6 அடி முதல் 15 அடி வரை ஆழத்தில் முதுமக்கள்தாழிகளில் வைத்து புதைத்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன. மேலும் அவ்வாறு புதைத்தப் பிறகு அவர்களது நினைவாக கற்படைவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது இறந்தவர்களின் உடலை புதைத்துவிட்டு அதைச் சுற்றி கற்களை அடுக்கி நினைவுச் சின்னங்கள் எழுப்பியுள்ளனர்.

இப்போது சில கற்படைவட்டங்கள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் ரியல்எஸ்டேட் தொழில், மலைஅடிவாரம் வரை வந்து நமது பாரம்பரிய சின்னங்களை அழித்து வருகின்றன.

மலைஅடிவாரத்தைச் சுற்றி, புதையுண்ட முதுமக்கள்தாழிகளின் விழிப்புகள் வெளியே தெரியும் வண்ணம் இப்போது அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது.

மேலும் பழங்கால கற்சிலை ஒன்று இப்போது அப்பகுதி மக்களால் அனிச்சியம்மன் என்று வழிபடப்படுகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விஜி மற்றும் சதுரங்கபட்டிணத்தைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகியோர் கூறியது:

"சாஸ்திரம்பாக்கம் மலையடிவாரம் மட்டுமின்றி இப்பகுதிகளைச் சுற்றியுள்ள அனைத்து மலை அடிவாரங்களிலும் அரியவகை சின்னங்கள் புதைந்து கிடைக்கின்றன. ÷சாஸ்திரம்பாக்கம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பணிக்காக தோண்டியபோது, முதுமக்கள்தாழி கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பகுதியில் இனியாரும் தோண்டக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனாலும், இப்பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கற்படைவட்டங்கள் கூட இப்போது காணவில்லை. எல்லாம் ரியல்எஸ்டேட் செய்யும் மாயம்.

தமிழக அரசு இப்பகுதியில் ரியல் எஸ்டேட்டுக்கு தடைவிதித்து அகழ்வாய்வுக்கு உத்தரவிட்டால், பல அரிய தகவல்களை உலம் அறிய செய்யலாம்' என்றனர்.

ஆதாரம்:-

http://www.dinamani.com/tamilnadu/2013/12/24/செங்கல்பட்டு-அருகே-ஓர்-ஆதிச/article1962239.ece







Sunday, December 22, 2013

காஞ்சிபுரம்: 3,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாழிகள் (Urn burial site discovered near Kancheepuram)


காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள மண்டபம் என்ற ஊரில் பெருங்கற்காலத்திற்கு முந்தையத் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் வீ. அரசு அவர்களும் விருந்து நிலை விரிவுரையாளர் முனைவர் சி. இளங்கோ அவர்களும் கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதி குறித்த தகவலை இங்குள்ள கல்குவாரியைச் சேர்ந்த மணி என்பவர் தெரிவித்தார். காஞசிபுரம் - உத்திரமேரூர் செல்லும் சாலையில் 13 கி.மீ. தொலைவில் பாலாறு, செய்யாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையே இம்மண்டபம் என்ற ஊர் அமைந்துள்ளது. இப் பகுதியில் கல்குவாரியில் பணிபுரியும் ஊழியர்களால் தோண்டப்பட்ட பெரிய பெரிய குழிகளில் பானைகள் பாதி பாதியாக உடைந்த நிலையில் தென்படுகின்றன. ஆதிச்சநல்லூரில் கிடைக்கும் தாழி மரபிற்கு இணை யானவையாக இவை உள்ளன. இத் தாழிகளில் பல கிழக்கு திசை நோக்கி சாய்ந்த நிலையிலும், நேரான நிலை யிலும் புதைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது இங்கு வாழ்ந்த மக்களிடம் நிலவிய இறப்பு குறித்த சடங்கினைப் புரிந்து கொள்ள முடிகின்றது. சில தாழிகளின் உள்ளே மண்தட்டுகளும், சிறிய மட்பானை களும் உள்ளன. மூடியுடன் புதைக்கப்பட்ட தாழிகளும் இங்கு கிடைக்கின்றன.  சிறிய இரும்பு கத்தி ஒன்று தாழியில் இருந்து கிடைத்துள்ளதால் இவை இரும்பு காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதியாக கூறலாம்.
இங்கு கண்டெடுக்கப்பட்ட தாழித் துண்டுகளில் எவ்விதக் குறியீடுகளும் பிராமி எழுத்துப் பொறிப்புகளும் இடம் பெறவில்லை. தாழியின் தன்மை மற்றும் அதன் அமைப்பினைக் கொண்டு அதன் காலத்தை இன்றிலிருந்து சுமார் 3,800 ஆண்டுகள் என தொல்லியல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி அவர் களும் கல்வெட்டாய்வாளர் முனைவர் ஆ. பத்மாவதி அவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
Urn burial site discovered near Kancheepuram
Dated to the pre-Megalithic/Iron Age period in T.N. — 1,800 BC-1,500 BC
A vast urn-burial site has been found at Mandapam village, near Aarpakkam intersection, about 14 km from Kancheepuram.
The importance of the site, archaeologists say, is that it belongs to a period earlier than the Megalithic Age or Iron Age in Tamil Nadu.
They estimate that the site is datable to 1,800 BCE to 1,500 BCE, that is, 3,800 to 3,500 years before the present.
The site, however, has been ravaged by quarrying for blue-metal. Earth-movers have sliced the big urns and smashed into pieces ritual pottery, bowls and terracotta plates inside the urns.
Quarrying has reduced the site to small lakes with deposits of blue metal jutting out and broken urns protruding in places. A stone-crushing machine is filling the air with dust.
Villager P. Mani, who discovered the site, reported it to V. Arasu, Head of the Department of Tamil, University of Madras, and S. Elango, lecturer in Tamil, Madras University. Dr. Elango, who visited the site a few times, said the flat/conical bottomed urns were buried only one or two feet below the soil surface. While some had ritual pottery and terracotta plates inside, others were empty. There were disintegrated human bones in several urns. More importantly, there were no cairn circles on the surface of the graves to mark them. There were no graffiti marks on the urns.
The site could be as ancient as the Adichanallur site, another urn-burial site in Tamil Nadu, Dr. Elango suggested.
Cairn circles are big stones, i.e., liths, placed in a circle on the surface of the soil and urns are kept below them. The urns are also kept inside cists, which are compartments made of granite slabs. Since big stones/liths mark the urn burials below, they are called Megalithic Age burials.
The Iron Age and the Megalithic Age are contemporaneous in south India. Archaeologists say the Iron Age in south India was extant from 1,000 BCE to 300 BCE.
T. Satyamurthy, former Superintending Archaeologist, Archaeological Survey of India visited the Mandapam site on Wednesday. He called it “an interesting site.”
It was “one more instance where we can say with authority that there was a phase earlier than Megalithic Age in Tamil Nadu.” He dated the site to between 1,800 BCE and 1,500 BCE.
While urn burials with cairn circles could easily be located, the discovery of urn burials without megaliths on the surface was mostly accidental. Such sites, without cairn circles, were not uncommon in Tamil Nadu. They included the Adichanallur site. It was a misnomer to call them megalithic sites because there were no big stones to mark them, Dr. Satyamurthy argued. So there was a phase when iron was used and which was older than the Megalithic Age, which could be called pre-Megalithic/Iron Age in Tamil Nadu.
Needed: Systematic Excavation
A. Padmavathy, retired Senior Epigraphist, Tamil Nadu Archaeology Department, said the upper age limit of the Mandapam site could be 3,500 years, judging from the coarse texture of the urns that were hand-made and their flat and conical bottoms.
The ritual pots inside were made by a slow-wheel. “Mandapam is an ancient site, equalling Adichanallur in antiquity and we should do a systematic excavation at Mandapam,” said Dr. Padmavathy.
When the Adichanallur site was re-excavated by Dr. Satyamurthy in 2004 and 2005, he found 185 burial urns there, including 90 intact and 36 with complete human skeletons inside.
Among the artefacts discovered were red ware, black ware, copper bangles and ear-rings, iron spearheads, daggers and swords ( The Hindu , March 14 and July 25, 2004 and Frontline , July 1, 2005).
“If the railway line between Tirunelveli and Tiruchendur, cutting across the mounds at Adichanallur had not been laid by the British, Adichanallur would not have to come to notice,” he said.
Akin to Adichanallur
The Mandapam site was analogous to the Adichanallur site in many ways, Dr. Satyamurthy said.
In both the cases, the urn burials were not associated with stone monuments; the urns were kept a couple of feet below the earth's surface, above a natural rocky outcrop; in both, it-lines were absent; the urns were covered with lids; the urns and associated pottery had no graffiti marks; and while Mandapam is located between Palar and Cheyyar rivers, Adichanallur is located on the banks of Tamiraparani. (The pottery found in the habitatational site at Adichanallur, however, had graffiti).
http://www.thehindu.com/todays-paper/tp-national/urn-burial-site-discovered-near-kancheepuram/article3294887.ece
http://www.pasthorizonspr.com/index.php/archives/11/2012/urn-burial-site-discovered-near-kancheepuram-under-threat