Thursday, January 1, 2015

அரிக்கமேடு


தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் பண்டைக்காலத்தில் பல வணிகத்தளங்கள் இருந்தன. அவற்றுள் மாமல்லபுரம், எயில்பட்டினம் (மரக்காணம்), அரிக்கமேடு (Arikkamedu), காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலியன குறிப்பிடத்தக்கன. மேற்கண்ட ஊர்களுள் அரிக்கமேடு என்பது புதுவை மாநிலத்தின் புகழ் சேர்க்கும் முகவரிப் பகுதியாக விளங்குகிறது.

( ஆங்கிலத்தில் ARIKAMEDU ) அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்து. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடைபெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது .

புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியோடிய ஆறு வளைந்து வடக்கு நோக்கிச் சென்று பின்னர் கடலில் கலக்கிறது

அரிக்கமேடு அழகான அமைதியான இடம் என்பது மட்டுமின்றி அங்கு வெளிநாட்டு வாணிபம் மிகச் செழிப்புற்று வளர்ந்திருந்திருக்கிறது என்பதும் கவனத்திற்குரியது ஆகும். இந்த இடம் எவ்வளவு வளத்துடனும் வனப்புடனும் விளங்கியது என்பதை அங்குள்ள திருமிகு "பிஞ்ஞோ தெ பெகெய்ன்" (MGR PIGNAY DE BEHAINE) என்ற கிறித்துவ மதகுருவின் அழகிய வீடு நமக்கு நன்கு புலப்படுத்துகிறது. இந்த வீட்டை மக்கள் "அத்ரான் சாமியார் வீடு" என்று அழைத்து வந்தனர். இந்த வீடு 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை, புதுச்சேரியில் இருந்த "கிருத்து சபைக்கு" (MISSIONS ETRANGERES) சொந்தமாக இருந்தது. அங்கு பாடசாலைகளும், ஓய்வு இல்லங்களும் நடத்தப்பட்டு வந்தன. தற்போது இச்சாமியாரின் வீட்டின் முகப்பின் ஒரு சிறு பகுதியும், பிற்பகுதி முபுவதும் இடிந்து கிடப்பதைக் காணலாம். இவை அடர்ந்த மாந்தோப்பின் நடுவில் காணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்து காணப்பட்டாலும், முறைப்படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோட்டத்தின் அமைப்பு காணப்படுகிறது. இந்த வீட்டிற்கு மேற்கே 150 மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் ஆறு ஓடுகிறது.

1937-ஆம் ஆண்டு "திரு.ழுவோ துய்ப்ரேய்" என்றழைக்கப்படும் பேராசிரியர், புதுச்சேரி பிரெஞ்ச்சுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இவர் ஒரு பிரஞ்சுக்காரர். இவர் ஒருமுறை அரிக்கமேடு பகுதிக்கு உலாவச் சென்றார். அங்குச் சிதறிக்கிடந்த சிறு சிறு பொருட்களும் கண்ணாடித் துண்டுகளும்,சில அரியகற்களும். பளபளக்கும் பல்வகைக் கற்களும் அவரது கவனத்தைக் கவர்ந்தன. இக்கற்களை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அவரிடம் கொண்டு வந்து கொடுத்தனர். திரு. துய்ப்ரேய் அவர்களுக்கு மிட்டாய், பணம் அல்லது வேறு ஏதாவது பரிசுப் பொருட்கள் கொடுப்பார். இப்பரிசுப் பொருட்களால் கவரப்பட்ட சிறுவர்கள் மேலும் மேலும் பொருட்களை சேமித்து அவரிடம் கொண்டுவந்து கொடுப்பதில் ஆர்வம் காட்டினர்.

அரியாங்குப்பம் ஆற்றை ஒட்டிய பகுதியில் பழங்கால அரிக்கமேட்டுப் பகுதியை அகழாய்வு வழி அடையாளம் கண்டுள்ளனர். மிகப்பரந்து விளங்கிய அரிக்கமேடு கடல் அரிப்பாலும் இயற்கை மாற்றங்களாலும் மிகச்சிறிய தீவுப்பகுதியாக இன்று விளங்குகிறது.

அரிக்கமேடு கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை புகழ்பெற்ற வணிகத்தளமாக விளங்கியது. வரலாற்றியல், தொல்லியல் அறிஞர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். அயல்நாட்டுப் பயணிகளான பெரிப்புளுஸ், தாலமி முதலானவர்கள் காவிரிப் பூம்பட்டினத்திற்கும் மரக்காணத்திற்கும் இடையே "பொதுகே' என்னும் வணிகத்தலம் (எம்போரியம்) இருந்துள்ளது எனக் குறித்துள்ளனர். பொதுகே என்பது இன்றைய புதுவை சார்ந்த அரிக்கமேடு பகுதியாகும் என மார்ட்டின் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் முதலானவர்கள் கருதுகின்றனர்.

அரிக்கமேட்டுப் பகுதியை இன்று பார்வையிடச் சென்றால் இன்று நமக்குப் பழந்தமிழக அகழாய்வுக் காட்சிகள் எதுவும் காண முடியாத படி மேட்டுப்பகுதியாக மாமரத்தோப்புகளாக மட்டும் காட்சியளிக்கும். ஏனெனில் இங்கு ஆய்வு செய்த அறிஞர்கள் தங்கள் ஆய்வினை நிறைவு செய்த பிறகு அவற்றைப் பாதுக்காப்பாக மூடி விட்டனர். ஆனால் அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் மண்ணரிப்புகளுக்கு இடையே பழைய பானை ஓடுகள், செங்கல், கட்டடச் சுவர் அமைப்புகளின் எச்சம், சிறு சிறு மணிகள் இவற்றை இன்றும் கீழே கிடக்கக் காணலாம்.

தொல்பொருள் ஆய்வுத்துறை ஏறத்தாழ 21 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றி வைத்துள்ளது. இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டதாக நம்பப்படும் கட்டிடச் சுவர்களின் மேல் பகுதியைக் காணலாம். அழகிய செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இக்கட்டடச் சுவரின் இடையே மிக அகலாமான, நீளமான கற்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழைய அரிக்கமேட்டுக் கல் என நம்புவோரும் உண்டு.

அரிக்கமேடு பண்டைக்காலத்தில் பெருமைமிக்க ஊராகப் புகழுடன் இருந்தது. கடற்கோளோ, இயற்கைச் சீற்றமோ, சமய மதப் பூசல்களோ, அயல் நாட்டினரின் படையயடுப்போ இவ்வூரின் பெருமையை அறிய முடியாமல் செய்துவிட்டது. ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தின் பகுதிகளைக் கைப்பற்றியபோது பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்குப் புதுச்சேரி வந்தது.

1940 அளவில் அரிக்கமேட்டுப் பகுதியில் பூமியில் தென்னம்பிள்ளைநட குழிதோண்டிய பொழுது மண்சாடி, மட்பாண்ட ஓடுகள் கிடைத்தன. இதன் விளைவாக 1944இல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் பல்வேறு உண்மைகள் மறைந்து இருக்குமென நினைத்து அகழாய்வில் ஈடுபட்டார். இதில் பல்வேறு உண்மைகள் வெளியுலகிற்கு தெரியவந்தன.

அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த பொருட்கள்:

அரிக்கமேட்டுப் பகுதியில் அகழாய்வு செய்துப் பார்த்த அறிஞர்கள் அழகிய செங்கல் சுவர், ஈமத்தாழிகள், பலவண்ண மணிகள், பலவகை ஓடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். இங்குக் கிடைக்கும் பல்வேறு மணிகளை ஒத்துக் கிழக்குக் கடற்கரையின் பழந்தமிழக நகரங்களிலும் மணிகள் கிடைக்கின்றன. கழிமுகப்பகுதிகளில், கிடைத்த ஓடுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளன.

பதினொரு அடி ஆழத்தில் ஒரு மண்டை ஓடும், பூணைக்கண் மணிகளும் கிடைத்துள்ளன. மணி உருக்குச் சட்டங்கள். சாயக்கலவை படிந்த ஓடுகள், கோமேதகக் கல், பச்சைமணிக்கல், படிகமணிகள், அரைத்தான் ஓடுகள், ரோமாணிய காசு, மோதிரம், உறைகிணறுகள் முதலியன குறிப்பிடத்தக்க பொருள்களாகும். இங்குக் காணப்படும் உறைகிணற்றில் சாயம் படிந்து காணப்படுவதால் துணிகளுக்குச் சாயம் ஏற்றும் தொழில் இங்கு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அரிக்கமேட்டுப் பகுதியில் பல்வேறு வடிவங்களில் மணிகள் கிடைப்பதாலும், அவற்றில் வேலைப்பாடுகள் காணப்படுவதாலும் இங்கு மணி உருக்குத் தொழிற்சாலைகள் இருந்தனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

பண்டைக்காலத்தில் மணிகளை உருக்கி, காய்ச்சி, துளையிட்டு, தூய்மை செய்து மணிகளை உருவாக்கியுள்ளனர். இங்கு நீலமணி, பச்சைமணி, ஊதாமணி, கருப்பு மணி மிகுதியாகக் கிடைத்தன. தங்கக் காசுகளும் செப்புக் காசுகளும் அரிக்கமேட்டில் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 200 வகையான மட்பாண்ட ஓடுகள் இங்குச் சேகரிக்கப்பட்டுள்ளன.பானை ஓடுகளில் "அண்டிய மகர்', அந்தக, ஆவி, ஆமி, ஆதித்தியன் எனும் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.

கூர்முனை சாடிகளில் பழச்சாறு தயாரித்து மண்ணில் புதைத்து உண்டுள்ளனர். பழங்காலத்தில் அயல்நாட்டினரை (ரோமானியர்) யவனர் என்றழைத்தனர். இவர்கள் மது அருந்தும் இயல்பு உடையவர்கள். இந்த யவனர்கள் மிகுதியாக இப்பகுதியில் தங்கியிருந்தமைக்குக் கூர்முனைச்சாடிகள் சான்றுகளாக உள்ளன.

எலும்பில் அமைந்த எழுத்தாணி, தங்கத்தில் செய்த கலைப்பொருள், மீன் முள்ளாலான கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. சுடுமண் பொம்மைகளில் மனித உருவங்கள் கலைநுட்பத்துடன் காட்டப்பட்டுள்ளன. முடி, முலை, முகம் சிறப்புடன் காட்டப்பட்டுள்ளன. கிளிஞ்சல், சங்கு இவற்றால் செய்த பொருள்களும் கிடைத்துள்ளன.

உரோமானிய விளக்கு, மரச்சாமான்கள், வடகயிறு, மரச்சுத்தி முதலான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் அரிக்கமேட்டு அகழாய்வில் கிடைத்துள்ளன.

ரோமப் பேரரசன் அகஸ்டஸ் தலை பொறித்த காசு அரிக்கமேட்டில் கிடைத்துள்ளது. அவன் வாழ்ந்த காலம் கி,மு. இருபத்து மூன்று முதல் கி.பி. பதிநான்கு வரை. அக்காலத்தில் அரிக்கமேடு சிறந்த வாணிபத்தலமாக விளங்கியது. அரிக்கமேட்டில் கிடைத்த மணிகள், மட்பாண்ட ஓடுகள் ஆகியவற்றைக் கொண்டு அவ்விடம் 2000 ஆண்டுகாலப் பழைமையுடையது எனக் கருதுகின்றனர். அரிக்கமேட்டில் கிரேக்க ரோமானியர்கள் வந்து தங்கி ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர். துணி நெய்தல், மட்பாண்டம் செய்தல், மணிவகைகள் செய்தல், சங்கு வளையல் செய்தல், உருக்கு மணி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். அங்குப் பெரிய நகரமே புதையுண்டு கிடக்கிறது. இவற்றிற்கு அடையாளமாகப் பல சாயத்தொட்டிகள், உறைக் கிணறுகள் அங்கு கிடைத்து வருகின்றன. அரிக்கமேட்டில் உருக்குமணி (Beads) செய்தல் நடைபெற்றுள்ளது. உருகுந் தன்மையுடைய மணற் பொருட்களைச் சூளையிலிட்டு உருகச்செய்து வண்ணமேற்றி நீண்ட இழைகளாகச் செய்து, அதனுள்ளே காற்றைச் செலுத்தி ஊது குழலாக்கிச் சூடு குறைந்த பின்னர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணிகள் செய்து மெருகூட்டி மணிமாலையாகக் கோர்த்துள்ளனர். கருப்பு, நீலம், ஊதா, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய நிறங்களில் மணிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அகழ்வாராய்ச்சி செய்தபோது மணி செய்த சிட்டங்களும், கச்சாப் பொருட்களும் உருக்குக் கிண்ணங்களும் கிடைத்துள்ளன.

ஒளியூடுருவக் கூடிய கண்ணாடிக் கற்களைக் கொண்டு மணிகள் (Semi precious stones), செய்தனர். நீலக்கல், பச்சைக்கல், சிவப்புக்கல், கோமேதகம் முதலிய கற்களைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பட்டை தீட்டித் துளையிட்டு, மெருகேற்றி மணியாக்கினர். கடினமான கற்களில் மெல்லிய துளையிட்டுள்ளதைக் காணும்போது அவர்களின் கைவினைத்திறம் தெளிவாகப் புரிகிறது. இதனைக் கண்ணாடி மணிகளென்பர் (Glass Beads). கடலில் கிடைக்குஞ் சங்குகளைக் கொண்டுவந்து அறுந்து பட்டை தீட்டி, மெருகேற்றி மணியாகவும், வளையலாகவும், மோதிரமாகவும் செய்துள்ளனர். அரிக்கமேட்டில் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணிகள், காதணிகள், மூக்கணிகள் ஆகியவை கிடைத்துள்ளன. அரியாங்குப்பத்து ஆறு, வெள்ளப் பெருக்கெடுத்தோடி மண்ணை அரித்து விடுகிறது. அப்படி அரிக்கப்பட்ட பகுதியே அரிக்கமேடு என்பர் சிலர். அங்கே அருகன் (புத்தன்) சிலையுள்ளது. ஆதலால் அருகன்மேடு - அருக்கன்மேடு - அரிக்கன் மேடு - அரிக்கமேடு என வழங்கப்பட்டதென்பர் சிலர். இங்குள்ள புத்தர் சிலை பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டதென்றும் அதனால் அது பர்மாக் கோயிலென வழங்கப் பட்டதென்றும், பின்னாளில் பிருமன் கோயில் - பிர்மன் கோயில் என்று மருவியது எனவும் கூறுகின்றனர். இப்பகுதியில் பௌத்தம் பரவியதென்பதற்கு இச்சிலையே சான்றாக உள்ளது.

அயல்நாட்டார் குறிப்பிடும் புதுச்சேரி:

புதுச்சேரியை பண்டைய அயல்நாடு வரலாற்று ஆசிரியர்கள் பெரிப்ளூஸ் என்னும் நூலில் (The Periplus of the Erytheraean Sea) பொதுகெ (Podouke) என்றும், தாலமி (Ptolemy) எழுதிய நூலில் பொதுகா (Podouka) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதே போல், தமிழகக் கடற்கரையை டிரிமிக்கா எனவும், காவிரிப்பூம் பட்டினத்தைக் காமரா எனவும், மரக்காணத்தை சொபட்னா (சோபட்மா) எனவும் அவர்கள் அழைத்தனர். அதற்கேற்றாற்போல் அரிக்கமேட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், அங்கு கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டவொரு வணிகத் துறைமுக நகரம் இருந்ததைக் காட்டுகின்றன.

சங்க இலக்கியமும் புதுச்சேரியும் :

புதுச்சேரியில் வாழ்ந்ததாகக் கூறப்படும் வீரை வெளியனாரும், வீரை வெளியந்தித்தனாரும் பாடிய பாடல்கள் இலக்கிய சான்றுகளாகத் திகழ்கின்றன. தமிழ் இலக்கியங்களில் காலத்தாற் பழைமையானவை சங்க இலக்கியங்கள். அவை கி.மு. 500 ஆண்டுகளை மேல்எல்லையான உடையன. அவற்றில் வீரை வெளியனார், வீரை வெளியந்தித்தனார் என்னும் புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வீரைவெளி என்னும் ஊர், புதுச்சேரிப் பகுதியிலுள்ள ஒரு சிற்றூராகும். வீரர்வெளி என்பதே வீரைவெளியென மருவியது என்பர். அப்பகுதியில் வாழ்ந்தவர்களாக இவ்விரு புலவர்களையும் கருத இடமுண்டு. வீரைவெளியனார் பாடல் அகநானூற்றில் முன்னூற்று இருபதாம் பாடலாகவும், வீரைவெளியன் தித்தனாரின் பாடல் அந்நூலில் நூற்று எண்பத்தெட்டாம் பாடலாகவும் காணப்படுகின்றன. இவ்விருவரும் ஒருவரே எனக்கருதுவாரும் உண்டு.

அரியாங்குப்பம் ஆற்றால் அரணிட்டுக் காக்கப்படும் அரிக்கமேட்டுப் பகுதியில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தித் தொடர் ஆய்வு செய்வதால் பழந்தமிழகத்தின் பெருமையையும் அயல்நாட்டுடன் கொண்டிருந்த கப்பல் வழி வணிகத்தையும் நிலைநாட்ட முடியும்.

கிட்டத்தட்ட மூன்று கிலோ மீட்டர் அளவிற்கு பூமிக்கு நெடுக புதைந்துள்ள ஒரு மாபெரும் நகரம் . அருகிலுள்ள ஆற்றிலும் மறைந்துள்ளது .














Remains Of A Trading Port Dating Back To 2nd Century

Arikamedu, the ancient Roman trade centre is 4-km south of Pondicherry on the Right Bank of Ariyankuppam River. Arikamedu is of special importance in South Indian archaeology and it is best known for its stone bead production. It has a long history that dates back to the 2nd century BC. Excavations in the Arikamedu area have brought to light the remains of a trading port, which had connections with the Greco-Roman world more than a century before the down of the Christian Era.

An Exquisite Blend Roman, Freanch & Indian Influence

Romans, Cholas and French who left their mark on this wonderful place inhabited the port town. Discovered in the 1930s, quickly linked with Roman trade, it was excavated three times in the 1940s. The first excavation was an amateur French endeavour; R.E.M. Wheeler conducted the second and best-known campaign and J.M. Casal conducted the third.

Arikamedu, a fishing colony was used as a port for trade with the Romans and Greco-Romans. An ancient Chola coin dating back to 1st BC suggests involvement of Cholas in various port related activities. Few names on seals that were found here have been mentioned in the Sangam literature as well.

Excavations Conducted By Jouveau-Dubreail

Jouveau-Dubreail identified Arikamedu as Poduke in the Periplus Maris Erythraei. The excavations by Jouvean Dubreuil in 1937 at Arikkamedu revealed hitherto unknown facts about the grandeur of the Dravidian Civilisation. It is a matter of regret that his discoveries are now in the French School of Museum at Hanoi. Later the site was divided into two sectors northern and southern, as they were perceived to have been inhabited by different ethnic groups. It is also known as "Yavanas" in Tamil literature.

Excavations Conducted By M.Wheeler

The British Director General of Archaeology M. Wheeler excavated many things at Arikamedu which are lodged at the Archaeological Survey of India. But now only fragments of the bulk of archaeological discoveries are at the Roman Rolland Museum, Pondicherry. Wheeler discovered the remnants of a factory owned by Romans belonging to the reign of Augustus.

Textile exports especially muslin cloth from Arikamedu area stands archaeologically proven by the discovery of series of tanks or dyeing vats. Graeco-Roman gem cutters habituated here had left gems carved with intaglio design as proof. Chinese ports of the 10th and 11th centuries had trade links. Even today if one looks carefully, after about of heavy rains, one can find beads on the bank of the river. The Romans must have used the Red Sea to come to India as traces of beads have been found in Alexandria and other Red Sea ports.

Arikamedu In Medieval Times

Formerly it was considered that Arikamedu was abandoned after 200 AD but during excavations few fragments of Amphoras and a copper coin of Constantine I minted between 306-324 AD found suggest that Arikamedu was occupied from 300 AD to 700 AD. There is also considerable evidence to suggest that the site was occupied during medieval Chola times. Finds of Chola coins, Chinese Celadon pottery and other East Asian glazed ceramics suggest occupation of the site and some involvement in the Medieval East-West maritime trade as well.

During excavations they came across pottery, which is very similar to the 11th century pottery of "Gangaikondacholapuram". Decorated spouts of water jars and clay lamps of the medieval period are also present. Two perpendicular walls were accidentally laid open and it was suggested that the bricks of this wall and that found in Gangaikondacholapuram are similar, though one cannot be sure. Therefore it is not possible to place the walls in any specific time period yet.

Arikamedu In Modern Times

The remaining walls of the seminary built between 1771-73 Monsieur Pigneau de, designated Bishop of Adran Behaine clearly indicate the use of mixed style of bricks, some of them, probably pilfered from ancient structures. The mission house has been the point of reference for all excavators viz. Wheeler, Casal and Vimala Begely and co. There doesn't seem to be evidence of any other structure belonging to this French period.

But now one can see a few fragments of decorative ceramic tiles and reliefs, pieces of pottery and glass in the Pondicherry Museum. Except for the perpendicular walls and mission house there is not much that can be seen on the surface as the excavated trenches have been filled up.

French astronomer named Guillume Le Gentil visited Pondicherry on the Coromandel coast of India, noticed some huge bricks, ruined walls and remains of old wells at a place called Arikamedu...

Some time between 1768-71, a French astronomer named Guillume Le Gentil visited Pondicherry on the south-eastern coast (known as the Coromandel coast) of India. He noticed some huge bricks, ruined walls and remains of old wells at a place called Arikamedu, just 4 km away from Pondicherry. Arikamedu was located on the right bank of the river Ariyankuppam, just as the river enters the Bay of Bengal. Le Gentil was convinced that these were the ruins of a large, ancient village or even a town. He was right, but it was a very long time before archaeologists realized the importance of this site.

Arikamedu was first excavated in the 1940's. in the northern part of the site archaeologists found the remains of what seemed to be a brick warehouse where trade goods were stored. In the southern part, they found two courtyards, along with tanks and drains. They thought that this might have been a place where fine muslin cloth was dyed and prepared for export. Though most of the pottery that was found was Indian, there were certain kinds of foreign pottery that clearly came from the Mediterranean countries f Europe. One was a red pottery with a decorated surface, known as terra sigillata. The other is called amphora. These are jars with a pink body and a yellow slip or coating, and two handles. Archaeologists also found lots of beads made of gold, glass, and semi-precious stones (some with Greek or Roman designs), Roman Lamps, and Roman glass items at the site.

What did the foreign jars that came to Arikamedu have inside them? Who were these things meant for?

These sorts of jars were used to hold wine, sauce or olive oil. These things might have been shipped to Arikamedu for foreign traders who lived here and missed the kind of things they were used to at home. But things like wine could just as well have been bought by well-to-do Indians.

Ancient Tamil poems talk in several places about people they call "yavanas." They talk of yavana merchants bringing in merchandise like fine lamps, gold, and wine and buying cargoes of pepper at the ports of South India. At this time, the word yavana was a general word used for foreigners such as Greeks, Romans, and West Asians. There also some old books in Greek and Latin that tell us about trade between the Roman empire and India between about 200 B.C. and 200 A.D.. They give us the names of ports and lists of goods. Hundreds of Roman gold coins, most of them belonging to the reigns of the Roman emperors Augustus and Tiberius, have been found at many places in India, mostly in the south. All these clues tell us that during this period, there was brisk trade going on between the Roman empire and India.

It all tied in neatly. The Tamil poems, the Latin books and the archaeological evidence seemed to be talking about the same sort of thing. Archaeologists were convinced that Arikamedu must have been one of the one of the places where the yavanas of the Tamil poems lived and traded. This must also have been one of many trading centers where the Romans and Indians carried out business with each other between the 1st century B.C. and the 2nd century A.D.. Some archaeologists identified Arikamedu with a place called Poduke, mentioned in old Latin books

What were the items of trade between the Roman empire and India? The imports from the Mediterranean lands that came to ports like Arikamedu included wine, bowls and lamps made of clay, glass beads and bowls, and maybe gems. Indian goods such as pepper were in demand in the west. Going by the evidence from Arikamedu, other thing exported from this port probably included beads of semi-precious stones and glass, and maybe shell bangles. There was also a brisk transit trade going on in items such as silk from China and species from south-east Asia. These first came to the Indian ports and then were shipped on to the west. Traders seem to have been familiar with the sea route from the Indian ports to the Mediterranean Sea via the Red Sea.

Arikamedu was excavated again recently between 1989 and 1992. These excavations led to new discoveries and made it necessary to change some of the earlier conclusions. The earlier archaeologists had thought that the settlement at Arikamedu had come up when the trade with the Roman empire started in the first century B.C.. The new excavations suggested that a fairly well-established settlement already existed here for some time before this trade started. But once the trade started, the settlement grew bigger and more prosperous.

The earlier archaeologists had thought that the northern part of Arikamedu was the port area and the southern part the industrial part, i.e. the area where the bead-making and textile work went on. The recent excavations suggest that the activities at the site were not so neatly divided. Also, some people, probably merchants and sailors, actually lived in both these areas. More foreign pottery was found in the northernmost part of Arikamedu, so this may have been where some foreigners lived. The tank-like structures found in the southern area were earlier understood as places where muslin cloth was dyed. Now it was suggested that they had nothing to do with dying cloth and may have been enclosures for storing food or some other kinds of goods.

Archaeologists are no longer sure about whether traders from the Roman empire actually lived at Arikamedu in large numbers or not. Do the foreign items found at Arikamedu point to foreigners living here, or do they simply point to items imported from foreign lands for local inhabitants? It is however clear that apart from Roman and Indians, there were many other people such as Arabs and Greeks from Egypt who were involved in the Indo-Roman trade.

Archaeologists used to think that the Indian trade with the Roman empire came to an end in the 2nd century A.D., and that the settlement of Arikamedu was abandoned when this happened. But the recent excavations show that there was some trade between India and the Mediterranean lands between the 3rd and 7th centuries A.D., although it was much less than before.

Coins of the Chola kings, and clay lamps made in the medieval period, and remains of even later periods show that people lived at Arikamedu, off an on, till modern times. Pieces of Chinese and east Asian pottery that were found at the site suggest that Arikamedu continued to be an important trading center, and that after the ninth century, the people were trading with other lands. Apart from the foreign trade, Arikamedu must also have been involved in the trade that was carried on up and down the Indian coasts as well.

As you can see, when a site is excavated again, the new evidence can give us a different picture of its history. There are still many unanswered questions about Arikamedu. For example, while we now know quite a bit about the importance of this site in the trade between India and the Roman empire, we need to find more about the connections between Arikamedu and other ports and towns of South India. Maybe further excavations at Arikamedu will soon give us answers to these and other questions.

.....

Monday, December 1, 2014

Porivarai (Karikkaiyur) 5000 year old Pre-historic Paintings


ART ATTACK: Drawings as old as 5000 years face threat from vandals,who have defaced most of the works by adding their element of creativity

Until a year ago,the rocks of Porivarai boasted of prehistoric paintings.Drawings of deer,bull,mongoose,elephant and figures of human beings,dating back to 5,000 years,decorated the hill,situated near Karikkiyoor,34km from Kotagiri in the Nilgiris.Today,the paintings face threat from vandals,who have defaced most of the works by adding their own bit of creativity.The graffiti by the vandals,using ordinary paints over the prehistoric works,indicates scant regard for heritage.

K T Gandhirajan,a member of the team that excavated the rock art of Porivarai in 2004,said he visited the spot every year and agonised over the vandalism.The original drawings were clearly visible when we excavated the place with the help of a local person.The graffiti you see today is the handwork of a mentally disturbed person from the nearby village.He goes to the site often and draws religious symbols on the prehistoric works, said Gandhirajan.The Porivarai rock art panel,according to him,is the largest in south India.

Even though the team that excavated the site immediately reported its findings to the Archaeological Survey of India (ASI) as well as the state archaeology department in 2004,neither took charge of it.If either of them had taken over the site,it would have helped us to protect it, said Gandhirajan.There are seven rock art sites in and around Kotagiri.Porivarai is the largest among them.It has more than 450 paintings,drawn in ochre and lime and made of natural pigments during different periods.There are plants,animals,human figures,including group scenes from battlefields and also of men riding on horses with weapons (bow and arrow,sword and shield) chasing the bulls.

Dakshina Murthy,a heritage art expert based in Delhi who happened to visit the place recently,said the rock panel in Porivarai was priceless.The drawings have a solid form,created from using white kaolin and red ochre.Some of the figures have three layers of depictions,indicating different periods or visits of artists to convey their visual expressions.The entire panel would have been filled with images over a long period showcasing the rich tradition of visual thinking, said Dakshina Murthy.

Although awareness drives,initiated by heritagelovers in and around Kotagiri,helped the locals understand the importance of the prehistoric rock art sites around them,many feel it is not enough.What you see in Porivarai is an insult to our civilization.Its high time the government stepped in to protect the site, said Dakshina Murthy.The original depictions can be restored.But,for this the government should first take over the site and provide it protection,said Gandhiraja

http://mobiletoi.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=7&sectid=edid=&edlabel=TOICH&mydateHid=29-06-2013&pubname=Times+of+India+-+Chennai&edname=&articleid=Ar00701&publabel=TOI

http://www.firstpost.com/cave-paintings/video/porivarai-prehistoric-cave-paintings/iP47ld-12ac344497S11.html

http://www.thehindu.com/thehindu/mag/2004/03/07/stories/2004030700460800.htm

http://archives.deccanchronicle.com/131007/news-current-affairs/article/rock-art-site-treasure-trove

Video

https://www.youtube.com/watch?v=CA21-DL74pI

4500 ஆண்டுகளுக்கு முன்பே வீரத் தமிழன் விளையாட்டு!

http://tamil.thehindu.com/opinion/reporter-page/4500-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article5575003.ece

அழிவின் பிடியில் கற்கால பாறை ஓவியங்கள்: 'கண் விழிக்குமா' தொல்லியல் துறை?

நீலகிரி கரிக்கையூர் பாறை ஓவியங்களின் சிறப்பு: கீழ் கோத்தகிரி அருகே கரிக்கையூர் பொறிவரை வனத்தில் உள்ள பாறை ஓவியங்கள், 300 அடி உயரமும், 500 அடி அகலமும் கொண்ட ஒரே பாறையில் வரையப்பட்டுள்ளன. இதில், 500க்கும் மேற்பட்ட பல்வேறு ஓவியங்கள் உள்ளன. இந்த பாறைக்கு அடியில் ஒரே நேரத்தில் 100 பேர் எளிதாக தங்கும் அளவுக்கு இட வசதி உள்ளது. இதனால், இப்பகுதியில் பழங்கால மனிதர்கள் அதிகளவில் தங்கியிருக்க வாய்ப் புள்ளதாக கருதப்படுகிறது. இதிலுள்ள மனித உருவங் கள் நடனமாடும் வகையிலும், போர்க் கருவிகளுடன் சண்டையிடும் காட்சிகளும், யானை மீது போர் கருவிகளுடன் அமர்ந்திருக்கும் காட்சிகளும், குதிரை, குரங்கு, காட்டு பன்றி, மாடு,எருது, ராட்சத பல்லி, மான், மீன் போன்ற உருவங்களும் காணப்படுகின்றன.

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=3931













.....

Tuesday, September 9, 2014

சிந்துவெளியில் ஊர்கள், துறைமுகங்கள், ஆறுகள், மலைகளின் பெயர்கள் தமிழில் (Tamil Names in Sindh [Indus] Valley)


சிந்துவெளி மற்றும் அரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”



புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்

'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.

சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும்.  அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.

எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.

சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்

பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது.  கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.

எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

நதிகள், மலைகளின் பெயர்கள்

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai),  புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும்  பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.


Sunday, May 18, 2014

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது மேட்டூர் அணையில் பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு

மேட்டூர் அணையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால கல்வட்டங்களை தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனை இரவு நேரங்களில் சிலர் சூறையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மிகவும் பழமையான வரலாறு கொண்டது. இம்மாவட்டங்களில் தான் வரலாற்று காலத்திற்கு முந்தைய கற்கால மக்களின் நினைவுச் சின்னங்கள் அதிகம் கிடைக்கின்றன. முக்கியமாக கற் திட்டைகள், குத்துக்கற்கள், கற்பதுக்கைகள், வட்டப்புதை குழிகள் என பெருங்கற்கால நாகரீகத்தின் நினைவுச் சின்னங்கள் அனைத்து ஒரே இடத்தில் கிடைக்கின்றது.

தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வாளர்கள் சுகவனமுருகன், ராஜன், அர்ஜுனன் ஆகியோர் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மேட்டூர் அணையின் நீர்தேங்கும் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது (தர்மபுரி மாவட்ட பகுதி) 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்திட்டைகளுடன் கூடிய கல்வட்டங்களும், கற்திட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

பாண்டவன் திட்டு என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்திட்டை மிகவும் பழமையானது ஆகும். தமிழகப் பெருங்கற்கால நினைவு சின்னங்களுள் குறிப்பிடத்தக்க இடத்தை பெறக்கூடிய ஒன்றாகும். இந்த கற்திட்டையின் மூடுகல் மட்டும் சுமார் 80 டன் எடை கொண்டதாக இருக்கும் என்பது இதன் பிரமாண்டத்தை காட்டுவதாகும். அதுமட்டுமல்லாமல் இக்கற்திட்டையின் இடுதுளை கிழக்கு பக்கம் உள்ளது. அரை வட்ட வடிவில் இருப்பது இதன் பழமையை காட்டுகிறது.

ஆய்வின் ஒரு பகுதியாக மலையனூர் திட்டு என்னுமிடத்தில் பெருங்கற்காலத்தை சேர்ந்த ஏராளமான கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கல்வட்டத்தின் நடுவே ஈமப்பதுக்கை இருப்பதும் அறியப்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட ஒவ்வொரு பாறாங்கல்லும் ஒரு டன் எடையுள்ள கற்களால் இக்கல்வட்டம் இருப்பது அபூர்வமான ஒன்றாகும். இடுதுளை ஒன்று இருந்திருக்கும் என்று யூகம் செய்ய மட்டுமே முடிகிறது என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையில் நீர் வற்றும் சமயங்களில் வெளியே தெரியும் நந்தியும், வீரபத்திரன் கோயிலும் சுமார் 800 ஆண்டுகள் மட்டுமே பழமையானது. சர்ச் கோபுரங்கள் சுமார் 100 ஆண்டுகள் பழமையானவை. ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பெருங்கற்கால நாகரீகத்தை சேர்ந்த இந்த ஈமச்சின்னங்கள் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.

புதையல் வேட்டையாளர்களும், அரியபொருள் திருடர்களும், பேராசைக்காரர்களும் தங்களது அறியாமையால் இரவில் குழி தோண்டி இச்சின்னங்களை சூறையாடி வருகின்றனர். இவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற அரசு முன்வரவேண்டும் என தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 










Friday, February 21, 2014

'நாகரிகத்தின் தொட்டில்' நாகை மாவட்டம்- கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்



தொன்மை சிறப்பில் நாகப்பட்டினம் மாவட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பழங்கற்காலம் தொடங்கி புதிய கற்காலம், பெருங்கற்காலம் சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம் என்று இன்றுவரை தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் இம்மண்ணில் இன்னமும் விரவிக் கிடக்கிறது.

குத்தாலம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப் பட்ட புதிய கற்கால ஆயுதமான கற் கோடரி சிந்து சமவெளி நாகரிகத்துக்கு சிறிதும் குறைந்ததில்லை. காவிரிக் கரை நாகரிகம் என்பதை உலகுக்கு உரத்துச் சொன்னது அது. பூம்புகாரின் எச்சங்களும், தலைச்சங்காடு அகழாய்வும் எல்லா நாகரிக வளர்ச்சியின்போதும் இங்கேயும் அதற்கு சற்றும் குறையாத வளர்ச்சி அதே விகிதத்தில் இருந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

சிவப்பு நிற ஓவியம்

அந்த சான்றுகளுக்கு இன்னமும் அதிக வலுசேர்க்கும் விதமாக சீர்காழி அருகே யுள்ள எடமணல் மேலப்பாளையம் கிராமத்தில் கிடைக்கும் விதவிதமான முதுமக்கள் தாழிகள் உள்ளன எனலாம். அளவுகளில் வேறுபட்டதாக காலத் தால் மாறுபட்டதாக விதவிதமாக கிடைக்கும் முதுமக்கள் தாழிகளில் இருந்து கத்தி, ஈட்டி, உணவுக்கலங்கள், விளக்குகள், கல்மணிகள், வெண்கல கிண்ணம் என்று பல்வகை பொருட்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், தற் போது கிடைத்திருக்கும் ஒரு மட்கல யத்தில் காணப்பட்ட சிவப்பு நிற ஓவியம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வியக்க வைக்கும் தொழில்நுட்பம்

பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாக அறியப்பட்டிருக்கும் அந்த மட்கலயம் புவியீர்ப்பு விசையைச் சமாளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. தஞ்சா வூர் தலையாட்டி பொம்மை போல அந்த மட்கலயத்தை எப்படி ஆட்டி விட்டாலும் கீழே விழாமல் ஆடி, திரும்பவும் நேராக நின்றுவிடும் அதன் தொழில்நுட்பம் வியக்கத் தக்கதாய் இருக்கிறது.

ஆனால், அதையும்விட அதிக வியப்புக்குரியதாகவும், ஆச்சர்யத்துக் குரியதாகவும் அமையக் கூடியது அந்த மட்கலயத்தில் உள்ள ஓவியம்.

பெருங்கற்கால சூலம்…

இதை கண்டறிந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் கூறும் போது, “இந்த மட்கலயத்தில் பெருங் கற்கால சூலம் போன்ற குறியீடு காணப் படுகிறது. இதுபோன்ற குறியீடுகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத் திருக்கிறது என்றாலும் அதைவிட சிறப் பான இன்னொரு ஆச்சர்யமும் இந்த மட்கலயத்தில் இருக்கிறது. அது ஒரு ஓவியம். சிவப்பு நிறத்தில் கிளைக ளோடு கூடிய ஒரு மரம் அந்த ஓவியத் தில் உணர்த்தப்பட்டிருக்கிறது. அதற் கான விளக்கம் ஆராயப்பட வேண்டிய அதேநேரத்தில் இன்னொரு விஷயத் தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

அவர்கள் வாழ்ந்த அந்த கால கட் டத்தில் சிவப்பு நிறம் என்பது மங்கள கரமான காரியங்களை உணர்த்தும் விதமாக மட்டுமே பயன்படுத்தப்பட்டி ருக்கிறது.

ஆனால், இங்கோ இறந்தவர் களை, இறக்கப் போகிறவர்களை வைக்கும் அமங்களகரமான தாழியில் வைத்த மட்கலயத்தில் எப்படி சிவப்பு நிறத்தை குறித்தார்கள் என்பதுதான் மிகப்பெரிய விவாதத்துக்குரியது. சிவப்பு நிறத்திலான இந்த ஓவியம் தமிழகத்தில் இதுவரை வேறு எங்கும் கிடைக்கவில்லை” என்கிறார்.

வேறுபடுத்திக் காட்டுவதற்கு…

சென்னையைச் சேர்ந்த கலை வர லாற்று ஆய்வாளர் காந்திராஜன் இது குறித்து விளக்குகிறார்: “தங்கள் கூட்டத்தின் தலைவனையோ அல்லது மதத் தலைவனையோ மற்றவர்களிடமி ருந்து வேறுபடுத்திக் காட்ட இப்படி சிவப்பு நிற குறியீட்டைப் பயன் படுத்தியிருக்கலாம்.

மண்ணில் சிவப்பு நிற குறியீடு வரைந்து பிறகு அதை சுட்டிருக்கிறார் கள். இந்த பகுதியில் கிடைக்கும் தாழி கள், வெண்கல கிண்ணங்கள், வட்டில் களைப் பார்த்தால் இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு தொழில்நுட்பங்க ளைக் கற்றுப் பயன்படுத்தியிருக்கிறார் கள் என்பது தெரிகிறது” என்கிறார்.

இப்படி அடுக்கடுக்காய் ஆதாரங் கள் கிடைத்தாலும் இன்னமும் அந்த பகுதியில் தொல்பொருள் துறையின் கவனம் திரும்பவில்லை. பொக்கிஷங் களைப் போற்றி பாதுகாப்பதில் இங்கு யாருக்கும் அக்கறையில்லை என்பதுதான் வேதனை.


Thursday, January 30, 2014

திருவக்கரை (Thiruvakkarai): 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரங்கள் (20 Million Years Old Fossilised Tree)


திருவக்கரை தொல்பழங்கால, வரலாற்றுக்கால ஊராகும். திருவக்கரை இயற்கைச் சிறப்பு மற்றும் பண்பாட்டுச்சிறப்பு பெற்ற ஊராகும்.

அமைவிடம்

இவ்வூர் திண்டிவனத்திலிருந்து மைலம் வழியாகச் செல்லும் பாண்டிச்சேரி சாலையில் சுமார் 23 கி.மீ தொலைவில் உள்ளது.

கல்மரங்கள்

இங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் கல்லாகி படிவங்களாகக் (fossils) காணப்படுகின்றன.

இங்கு ஒரு கல்மரப் பூங்கா உள்ளது. இது போன்ற கல் மரங்கள் கிடைக்கும் இடங்கள் தமிழகத்தில் வெகு சிலவே உள்ளன.

தொல்பழங்காலச் சான்றுகள்

இங்கு பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள், கல் மரங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. இவற்றில் சுரண்டிகள். செதில் கருவிகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். இந்தக் கல் மரத்துண்டுகளும், குவார்ட்சால் ஆன கூழாங்கற்களும் கருவிகள் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளன

பெருங்கற்காலச் சான்றுகள்

இங்கு பெருங்கற்காலத் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கருப்பு-சிவப்பு மற்றும் சிவப்புப் பானைகள் காணப்படுகின்றன. மேலும் கருங்கற்களாலான கருவிகளும் கிடைக்கின்றன. இவைகளும் கல் மரங்களும் அருகிலேயே காணப்படுகின்றன.

கோவில்

இங்கு வரலாற்றுச்சிறப்பு மிக்க சிவன் கோவில் உள்ளது. இதன்பெயர் சந்திர மௌலீஸ்வரர் என்பதாகும். இக்கோவிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த முதலாம் இராசராசன் மற்றும் குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் உள்ளன. சோழ அரசன் கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவி, இங்கு திருப்பணி செய்துள்ளார். இக்கோவிலில் தேவரடியார்கள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.

http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/tiruvakara.htm

A repository of spectacularly preserved fossilised trees

The National Fossil Wood Park in Thiruvakkarai, located about 35 km from Puducherry on the road to Tindivanam in Villupuram district, maintained by the Geological Survey of India (GSI) is a repository of spectacularly preserved fossilised trees that are at least 20 million years old. They belong to what is called the ‘Mio-Pilocene' age and give a glimpse of the composition of flora that existed in the pre-historic ages.

R. Pitchai Muthu, Director of the GSI, Tamil Nadu believes that the fossil woods was the result of a huge flood that occurred millions of years ago. The flood waters destroyed large parts of forests in the adjoining area. The trees were then transported to the present site of deposition in inland seas. This can be confirmed from the fact that “branches and roots are absent in these horizontally disposed trees,” he says.

They then underwent the ‘petrification' process “during which the woody matter was replaced by silica and the water was expelled due to compaction of the superposed elements.”

The silica that has preserved these tress are said to be derived from volcanic ash ejected during explosions. But even today, the annular rings and pit structures of the tress are brilliantly preserved and are visible even to the naked eye. All these provide vital evidences in determining the age of such fossils. Infact, Mr. Muthu says that the degree of perfection in the petrification process in Thiruvakkarai is a rarity. Very few fossil forests in the world can boast of such high levels of preservation.

The park has around 200 fossil trees ranging from 3 to 15 metres in length and 5 metres in girth. According to local legends, the trees are the bones of a demon that was slain by Lord Vishnu. They also find mention during festivals at the famous Kali temple in the village. The number of tourists visiting this park has been minimum largely due to its location. The approach roads leading to the park are in a deteriorated state and travelling in cars and buses could be a difficult task. In order to improve such infrastructure, the GSI has proposed a Rs. 56 lakh project to construct a mini museum and approach steps to the park. Once completed, Mr. Muthu says it would help promote Thiruvakkarai as a major tourist spot in the State.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/a-repository-of-spectacularly-preserved-fossilised-trees/article794856.ece





Wednesday, January 29, 2014

கிருட்டிணகிரி பாறை ஓவியத்தில் கழுதை உருவம்!: (2500-3000) ஆண்டுகளுக்கு முற்பட்டது (Rock paintings of Iron Age period found near Krishnagiri)


கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியத்தில் முதன்முறையாக கழுதை உருவத்தை வரவாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கிருட்டிணகிரியில் பெண்ணை யாறு தொல்லியல் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் தமிழகம் முழுக்கச் சென்று பல்வேறு வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கிருட்டிணகிரி, தருமபுரி மாவட்டங்களில் வரலாற்றுச் சின்னங்களைத் தேடிக் கண்டுபிடித்து, பதிவு செய்து வருகின்றனர். மேலும், வரலாற்றுச் சான்றுகளை அழிவிலிருந்து காக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

முதல் பதிவு

சில மாதங்களுக்கு முன் இவர்களது ஆய்வில், கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியத்தில் குரங்கு உருவம் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பாறை ஓவியங்களில் குரங்கு உருவம் இருப்பது அரிதானது. இந்த நிலையில், தற்போது பாறை ஓவியத்தில் கழுதை உருவத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில் கழுதை உருவம் இருப்பதாக எந்தச் சான்றும் பதிவு செய்யப்படவில்லை. அந்த வகையில், தமிழகத்தில் கண்டறியப்பட்ட பழைமை வாய்ந்த கழுதை உருவ பாறை ஓவியம் கிருஷ்ணகிரியில் தற்போது கண்டறியப்பட்டதேயாகும்.
இந்த ஓவியம் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கழுதையின் பயன்பாடு இருந்திருப்பது இந்த ஓவியத்தின் மூலம் உறுதியாகிறது.

மலைக் குன்று

இந்த ஓவியம், கிருட்டிணகிரி மாவட்டம், மேல்பட்டி கிராமத்தின் அருகேயுள்ள மலைக்குன்று ஒன்றில் உள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் சுகவன முருகன், சதாநந்தன் கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த ஓவியத்தைக் கண்டறிந்தவர்கள். இதுகுறித்து அவர்கள் கூறியது:
இதுவரை அறியப்பட்ட பழமையான பாறை ஓவியங்களில் குதிரை, எருது, பசு, மீன், மயில் என விலங்குகளும், பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளன. தற்போதுதான் முதன்முறையாக கழுதை ஓவியம் கண்டறியப் பட்டுள்ளது. இதில், கழுதையின் மீது வீரன் ஒருவன் வாளை ஏந்தியபடி சவாரி செய்கிறான். இந்த தொகுப்பில் இரு கோலங்கள், ஒரு மனிதன், ஒரு விலங்கு, ஒரு கை உள்பட 7 ஓவியங்கள் உள்ளன.

சுண்ணாம்புக் கலவை

தமிழகத்தில் பல இடங்களிலும் இதுவரை ஏராளமான கை ஓவியங்கள் கிடைத்துள்ளன. ஆனால், இந்த கை ஓவியம் சிறப்பான வகையில், ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் கை எனக் கருதும் அளவு சிறியதாக உள்ளது. இந்த ஓவியங்கள் அனைத்துமே வெண்சுண்ணம் எனப்படும் சுண்ணாம்புக் கலவையால் வரையப்பட்டுள்ளன. கிருட்டிணகிரி மாவட்டத்தில் பாறை ஓவியங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில், இந்த கழுதை ஓவியம் கண்டறியப்பட்டது ஒரு மைல்லாகும்.
தனியாருக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் குன்று இருப்பதால், அடிவாரத்தில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு விட்டன. குன்றின் உச்சியில் உள்ள சிறிய காளியம்மன் கோயில் அருகே இருப்பதால், இந்த பாறை ஓவியம் சிதைக்கப்படாமல் தப்பித்துவிட்டது. அந்த சிறு கோயிலை ஒட்டிய பாறைகளின் மீது அமைந்துள்ள பெரிய பாறை ஒன்றின் விதானப் பகுதியில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சிலர் இந்தப் பாறை மீது கிறுக்கி, சேதப்படுத்தியுள்ளனர். மேலும், எந்நேரமும் இந்த பாறைகள் உடைத்து நொறுக்கப்படலாம் என்ற சூழலும் நிலவுகிறது. அரசு சிறப்பு சட்டங்கள் கொண்டு வந்தால் மட்டுமே, இதுபோன்ற வரலாற்று ஆவணங்களைக் காக்க முடியும் என்றனர்.

A rock painting of the Iron Age period was found in a hillock near Krishnagiri. This is one of the 11 rare rock paintings found in the hillocks of the district and within a radius of six kilometres from the town.

Archaeologist

According to Sugavana Murugan, a government school teacher and also a freelance archaeologist, only three of the paintings have been studied and the rest are yet to be documented.

Tamil Pandit

The first rock painting was found near the Gothigundu rock in 1972 by late Ramanujam, a Tamil Pandit who worked in the Government Boys Higher Secondary School. Megalithic potteries were also found in large numbers in and around Pethalapalli hillocks.

Survey


The need of the hour is to survey rare ancient rock paintings in the three hillocks around Krishnagiri and safeguard them, said Mr. Sugavana Murugan.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rock-paintings-of-iron-age-period-found-near-krishnagiri/article3829926.ece